Thursday 19 July 2012


தேன் சுமந்து வந்த தேவதையே - 2


எல்லா சத்தங்களும் ஒடுgங்கிய
நடு சாமத்திலும்
தாளம் வாசிhத்தனவே
நமது உதடுகள்
முத்த்த சத்தத்தால்

அந்த கார்கால
இரவு பொழுதிலும்
நம் முத்தசத்த்திற்கு
போட்டியாக
தாமரை தடாகத்தில்
தவளைகள் சத்தம்

எனக்காக
உன் பிஞ்சுக்கரங்களில்
தேன் சுமந்து வந்த தேவதையே
இதழில் தேன் தடவிவிட்டு
உன் இதழ்த்தேன்
போதும் என்றேனே!

மூக்கின் புல்லாக்கை
முத்தமிடும்போது
இது என்ன இடைஞலாய்
என்று நீ கழற்றி
வீசச்சென்றாயே
அதை வாங்கி என் கழுத்தில்
நம்
காதலின் சின்னமாய்
அணிந்து கொண்டேனே!
மணலில் புதைந்த
உன் கால் கொலுசை
அந்த இரவிலும் தேடி தந்தேனே
ஆச்சரியத்தில் மூழ்கிய நீயோ
என் கன்னத்தை கிள்ளினாயே

பார் என் கன்னத்தை
அந்த இரவின் காயம்
இப்போது மச்சமாய்
என் கன்னத்தில்

நதியோடு
நடைபோட்டு
உன் இடையில்
கை போட்டேன்
எல்லையை மீறாதே என்று
நீயும் தடை போட்டாயே!

ஓயாது பேசுவாய்
நானும் ஆச்சரியத்தில் மூழ்கி ஆச்சரியத்தில்
இறங்குவேன்
இந்த உறுப்பு எதனால் செய்யப்பட்டது என்று

விட்டு விட்டு
ஒலித்ததே
சில் வண்டின் சத்தம்
நம் பேச்சு சத்தத்தை
ஒட்டு கேட்டபடி

பால் நிலவின்
பால் ஒளியில்
உன்
பால் மேனியில்
பாலபிஷேகம்
செய்யத்தொடங்கி இருந்தேன்

காற்றும்
நுழைய இயலா வண்னம்
என்னை இறுக்கிகொண்டு
மூச்சும் மூச்சும்
பேசிக்கொள்ளும்
நெருக்கத்தில்
அமர்ந்திருந்தாயே
அருகில் துள்ளி ஓடிய
காட்டு முயலை கண்ட அச்சத்தில்

சில்லென்ற காற்று
என் தேகத்தை தூண்டி
உன் கண்களை ஆராய்ச்சி செய்யச்சொன்னது
நானும் உன் கண்களையே
உற்றுப்பார்த்து ஆய்வு செய்து கொண்டிருந்தேன்
வெட்க தாளாமல் வெட்கி வெட்கி
நீயும் தலை குனிவாயே!

கண்களால் தேன்
பருகிக்கொண்டிருந்தேன்
கண்ணழகி
உன்னைக் கண்ணாரக்க கண்டு!
தூக்கமில்லாத
அந்த ப்பொழுதுகளை
இப்பொழுதுஇ நினைத்தாலும்
ஏக்கமாக இருக்கிறது

நான் உன்வாசம்
பிடித்துக்கொண்டிருந்தேன்
நீயோ
அருகில்
இரவில்
மலர்கின்ற
காட்டுப்பூவின்
வாசம் பிடித்துக்கொண்டிருந்தாய்

நீ வாசம் பிடித்த
அந்த பூவை
பறித்து வந்து உன்கூந்தலில்
நான் சூட்ட
இலக்கணம் வரைய முடியாத
ஒரு பார்வை பார்த்தாயே
புன்னகைத்தாயே
அந்த பார்வையும் புன்னகையும்
இன்றும் என் ஞாபகத்தில்!

சங்க காலத்து இலக்கியங்கள் எல்லாம்
உன் அங்க இலக்கியத்தை
எனக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தது

புற நானூறு
உந்தேகத்தின் வரலாறு சொல்லிக்கொண்டிருந்தது

அக நானூறு
உன்னிடம் படிக்க வேண்டிய
சுக நானூற்றை
எடுத்து சொல்லிக்கொண்டிருந்தது
இருவரித்திருக்குறளோ
உன்னிரு இதழ்க ளில்
எப்படி தேன் குடிப்பது என்று
செப்பிக்கொண்டிருந்தது
மணிமேகலை
படிக்கச்சொன்னது
உன் இடைமேகலையை
பரிபாடலோ
உன் இரு கருவிழிகளின்
பெறுகின்ற இன்பத்தை எடுத்தியம்பியது

ஆல்ய மணியின் ஓசை
தேவார சத்தம்
காற்றில்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

தேன் சுமந்து வந்த தேவதையே - 2





காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி...
அப்போதுதான்
நாம் நி
நினைவுக்கு வந்தோம்
கிழக்கில்
கதிரவன்
நம்மை கண்டு
நானத்தால் சிவந்து
மெல்ல எட்டிப்பார்த்தான்
நான்
முறைத்தேன்
அதற்குள்
என்ன அவசரம் என்றேன்
வெடுக்கென்று நீ சிரித்தாய்
அதைக்கேட்டு

அப்போதும் சரி
இப்போதும் சரி
எப்போதும் சரி
நீதான்
என்
இளவரசி!
நாந்தான் உன்
இளவரசன்!
- அன்புடன் ஓம்