உனக்காகவா என்று ........
எதிர் பார்த்தேன்
விஷம் குடிக்க போகிறேன் என்று சொன்ன போதும்
எதிர் பார்த்தேன்
விஷத்தை குடித்துவிட்டு சொன்னபோதும்
எதிர் பார்த்தேன்
என் இதய துடிப்பு முன்பில்லாத வேகத்தில் துடிக்கும்போதும்
எதிர் பார்த்தேன்
நெஞ்சை அமில எரிச்சலில் பிசைகின்ற போதும்
எதிர் பார்த்தேன்
என் நுரையீரல்கள் மூச்சுக்கு தவிக்கும்போதும்
எதிர் பார்த்தேன்
என் நினைவு செல்கள்
என்னையே முற்றிலும் யாரென்று
மறந்து போகிற அந்த தருணத்திலும்
எதிர் பார்த்தேன்
இறுதியாய் விடாப்படியாய் பிடித்து கொண்டிருக்கிற என் உயிரை
தேகதிடமிருந்து விடாப்படியாய் முறித்துக்கொண்டு விடுதலை பெற்று
வெளியேறும் அந்த இறுதி தருணம் வரை எதிர் பார்த்தேன்
காதலை சொல்வாய் என்றல்ல
ஒரே ஒரு முறை இறுதியாய் அன்பே உன் திரு முகத்தை காண
எதிர் பார்த்தேன்
- அன்புடன் R.P.OM