Friday 11 January 2013

உன் நினைவுகள் என்னை உண்டு

நான் எதையும் 
உண்ணுவதே இல்லை
உன் நினைவுகளால்  
ஆனால் 
உன் நினைவுகள் என்னை 
உண்டு தன் ஆயுளை 
வளர்த்துகொள்கின்றன 
- அன்புடன் R. P.OM   

எதிர் பார்த்தேன்

உனக்காகவா என்று ........

எதிர் பார்த்தேன் 
விஷம் குடிக்க போகிறேன் என்று சொன்ன போதும் 

எதிர் பார்த்தேன் 
விஷத்தை குடித்துவிட்டு சொன்னபோதும் 
எதிர் பார்த்தேன் 
என் இதய துடிப்பு முன்பில்லாத வேகத்தில் துடிக்கும்போதும் 
எதிர் பார்த்தேன் 
நெஞ்சை அமில எரிச்சலில் பிசைகின்ற போதும் 
எதிர் பார்த்தேன் 
என் நுரையீரல்கள் மூச்சுக்கு தவிக்கும்போதும் 
எதிர் பார்த்தேன் 
என் நினைவு செல்கள் 
என்னையே முற்றிலும் யாரென்று 
மறந்து போகிற அந்த தருணத்திலும் 
எதிர் பார்த்தேன் 
இறுதியாய் விடாப்படியாய் பிடித்து கொண்டிருக்கிற என் உயிரை 
தேகதிடமிருந்து விடாப்படியாய் முறித்துக்கொண்டு விடுதலை பெற்று 
வெளியேறும் அந்த இறுதி தருணம் வரை எதிர் பார்த்தேன் 
காதலை சொல்வாய் என்றல்ல 
ஒரே ஒரு முறை இறுதியாய் அன்பே உன் திரு முகத்தை காண 
எதிர் பார்த்தேன் 
- அன்புடன் R.P.OM   

காதலே என் காதலே


காதலே   என் காதலே  
ஆயிரம் தடவைக்கு மேல் 
கெஞ்சினாய் காதலை சொல்லிவிடு என்று 
 உன்னதமான உன் காதலை
 உணர்ந்த அந்த தருணம் 
ஓடோடி வந்தேன் காதலை சொல்ல 
சொன்னேன் என் காதலையும் உன்னிடம் 
உன் கல்லறையை 
கட்டி பிடித்து அழுது கொண்டே
ஐயோ  
காலம்  கடந்த என் காதலே 
காலம்  கடந்த என் காதலே 
- அன்புடன் R.P.OM